தளராத தலைவர்கள் :மீண்டும் கடிதம்!
ரணில் விக்ரமசிங்கவின் இந்தியவுக்கான விஜயத்திற்கு முன்னதாக தமிழர் பிரச்சனையை தீர்க்க அழுத்தம் கொடுக்கவேண்டி தமிழ் கட்சிகள் இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பமுற்பட்டுள்ளன.
இந்திய பிரதமருக்கான கடிதம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்று குழுவில் தீர்மானம் எட்டப்படடுள்ளடதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
„யுத்தம் முடிந்து 14 ஆண்டுகளில் தமிழ் மக்கள் தீர்வொன்றினையோ அல்லது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஏனைய பிரச்சனைகளோ தீர்க்கமுடியாத நிலையிலேயே காணப்படுகிறது.
அதற்கு அப்பால் ஒரு சில கட்சிகளை தவிர ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் மீண்டும் இந்தியாவை நாடி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா இல்லாமல் இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது என கூறியே நாடியிருக்கின்றன.
இந்திய பிரதமர் ஈழத்தமிழர்களின் பிரச்சனையை தீர்க்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகம் கூடியபோது முக்கியமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமரை சந்திக்க உள்ள நிலையில் ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வை காண வேண்டும்.
அதற்கு அப்பால் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ள 13 ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைக்குள்ள முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்.
போரின் பின்னர் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளான நில ஆக்கிரமிப்பு, பௌத்த மயமாக்கல் போன்ற பல பிரச்சனைகளுக்கு இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தத்தை பிரயோகித்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஏனைய தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகளும் இணைந்து சந்திப்புக்கு முன்னதாக இந்திய பிரதமருக்கு ஒரு கடிதத்தை கையெழுத்திட்டு அனுப்பவேண்டும் என்ற தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.