November 21, 2024


யாழ்ப்பாணத்தில் படைகளது பிரசன்னத்தை நியாயப்படுத்துவதில் மீண்டும் அரசு தனது முகவர்கள் ஊடாக பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம் பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், குழு மோதல்கள், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், கால்நடைகளை வெட்டுதல், மணல் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என யாழ்ப்பாண மாவட்ட செயலர்; அ.சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக புதிதாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ கெட்டியாராச்சி யாழ் மாவட்ட செயலரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்ட செயலர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.

மேலும் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன காணியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிய நிலையில், சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பொருட்கள் களவாடப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.எனவே இராணுவத்தினர் அதனை தடுத்து நிறுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இராணுவத்தினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் பல அளவீடு செய்யப்படாது பொதுமக்களிடம் கையளிக்கப்படாமல் உள்ளது.

காணிகளையும் விரைவில் அளவீடு செய்யும் நடவடிக்கையில் உரிய சம்பந்தப்பட்ட திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இராணுவத்தினர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert