அமரர் சிவகுரு சிவயோகநாதன் (சின்னக்குஞ்சன்)

மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாழ் மற்றும் மட்டுவில் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாபதி சிவயோகநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து ஆனதப்பா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அப்பா என்ற அன்பிற்கு ஈடாகுமா?
எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!
வரமாக எமக்கு கிடைத்த ஐயாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்: குடும்பத்தினர்