முன்னணி கூட தமிழீழம் கேட்கவில்லை:சிவி
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவதற்கு அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒரு கட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளன. தமிழ் காங்கிரஸ் மட்டுமே பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நிராகரித்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளான்.
தமிழ் காங்கிரஸ் உட்பட வடக்கிலும் கிழக்கிலும் பதின்மூன்று பதிவு செய்யப்பட்ட தமிழ் கட்சிகள் உள்ளன. காங்கிரஸைத் தவிர 12 கட்சிகளில் ஏழு கட்சிகள் கையெழுத்திட்டு, தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக இல்லாவிட்டாலும் பதின்மூன்றாவது திருத்தத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளன.
பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதில் இந்தியப் பிரதமரின் தலையீட்டை தமிழ் கட்சிகள் கோரியேயுள்ளன.எனவே அரசியலமைப்பு ரீதியாக தற்போது கிடைக்கப்பெற்றுள்ள பதின்மூன்றாவது திருத்தத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்ற விருப்பம் பன்னிரெண்டு கட்சிகளிடையேயும் பொதுவானது.
அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் நிரந்தரத் தீர்வுக்கான இறுதிக் குறிக்கோளாகக் கூட்டாட்சி முறையைக் கொண்டிருக்கின்றன. சுவிட்சர்லாந்தில் உள்ளது போல் கூட்டமைப்பு வேண்டும் என எங்கள் கட்சி கேட்டுள்ளது. எந்தக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸ{ம் கூட பிரிவினை கேட்கவில்லை.
dtd=19
எனவே நமது அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ள சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதை தமிழர் கட்சிகள் பாதகமாக பார்க்க வேண்டியதில்லை.
தம்மிடம் இருந்து மாறுபட்டு சிந்திப்பவர்களை துரோகிகளாகவே காணும் பழக்கத்தை எமது தமிழ் அரசியல்வாதிகள் எப்படியோ ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.;.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள எமது தமிழ் புத்திஜீவிகள் எமது அரசியல் இலக்குகள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கு எமது மக்களிடையே ஆர்வத்துடன் விவாதங்களையும் கலந்துரையாடல்களையும் ஆரம்பித்தால் அது எமது மக்களுக்கு உதவியாக இருக்குமெனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.