Dezember 3, 2024

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை வென்றது அவுஸ்ரேலியா

இந்தியாவை 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி  ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அவுஸ்ரேலிய அணி வென்றுள்ளது.

இப்போட்டியில் முதல் இன்னிஸிற்காக அவுஸ்ரேலிய அணி 469 ஓட்டங்களையும் இந்திய அணி 296 ஓட்டங்களை பெற்றுக்கொண்டன.

இதனை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்ரேலிய அணி 270 ஓட்டங்களோடு ஆட்டத்தை இடைநிறுத்திக்கொள்ள 444 என்ற வெற்றி இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இருப்பினும் அனைத்து விக்கெட்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே இந்திய அணி பெற்றுக்கொள்ள 209 ஓட்டங்களினால் அவுஸ்ரேலிய அணி வெற்றிபெற்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert