தேசிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்றம் தடை
தேசிய மக்கள் சக்தியால் இன்றைய தினம் வியாழக்கிழமை நடத்த திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெலிக்கடை பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி இன்று ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்துள்ளதாக முன்னர் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மேற்படி தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதனடிப்படையில், ஸ்ரீஜயவர்தனபுர வீதி, கொட்டாவ வீதி மற்றும் சரண வீதி ஊடாக பேரணிகள்; தேர்தல் செயலகம் அமைந்துள்ள பிரதேசத்திற்குப் பிரவேசிப்பதை தடை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.