யுத்த கால 500கிலோ குண்டு மீட்பு!
500 கிலோகிராம் நிறையுடைய அதிசக்திவாய்ந்த விமானக் குண்டொன்று, கிளிநொச்சி தர்மபுரம், மயில்வானகம் காட்டுப்பகுதியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
யுத்தக்காலத்தில் கிபீர் விமானத்தால்வீசப்பட்ட வெடிக்காத குண்டே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது .
பிரதேசவாசியினால் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்த சக்திவாய்ந்த குண்டு கண்டறியப்பட்டள்ளது.
3 அடி நீளமும், 3 அடி சுற்றுவட்டமும் கொண்ட இந்த குண்டு, இன்றைக்கு 15 வருடங்களுக்கு முன்னர் பூமியை நோக்கி வீசப்பட்டுள்ளது.