பதற்றத்திற்குள் மத்தியில் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுப்பு!
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 14 ஆம் ஆண்டு நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கொழும்பு பொரளைப் பகுதியில் நடைபெற்றது.
அமைதியான முறையில் நூற்றுக் கணக்கான மக்கள் ஒன்றுகூடி இந்த நிகழ்வை நினைவுகூர்ந்தனர்.
குறித்த நிகழ்வானது தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கபடும் முள்ளிவாய்கால் நினைவேந்தலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் கொழும்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வைக் குழப்பும் வகையில் இன்னொரு அணியினர் ‘புலிகளின் நினைவேந்தல் வேண்டாம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் கலகம் அடக்கும் காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.