November 22, 2024

உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்து சேவை ஸ்காட்லாந்தில் அறிமுகம்

உலகில் முதல் முதலாகப் பேருந்து ஓட்டுநர் இல்லாத பேருந்துகள் மக்களின் பொதுப் பயன்பாட்டுக்கு மே 15 ஆம் நாள் முதல் ஸ்கொட்லாந்து அறிமுகப்படுத்தவுள்ளது.

இத்திட்டத்தை ஸ்டேஜ்கோச் (Stagecoach) பேருந்து நிறுவனத்தால் நடத்தப்படவுள்ளது. இத்திட்டம் CAVForth என்று அழைக்கப்படும் ஒரு சோதனைத்திட்டமாகும். இதற்கு பிரித்தானிய அரசாங்கம் நிதியளிக்கிறது.

கிழக்கு ஸ்காட்லாந்தில் உள்ள AB1 சாலையில் சென்சார்களின் உதவியுடன் கணினிகள் மூலம் இயக்கப்படும். ஆனால் ஏதேனும் தவறு நடந்தால் அதை எடுத்துக் கொள்ள ஓட்டுநர் ஒருவர் தயாராக இருப்பார் என்று கூறப்படுகிறது.

பேருந்துகள் ஒரு வாரத்திற்கு 10,000 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது. இது ஃபோர்த் சாலை பாலத்தின் மீது எடின்பர்க்கில் பயணிக்கும்.

ஃபெரிடோல் பூங்கா மற்றும் ஃபைஃப் மற்றும் எடின்பர்க் பார்க் தொடருந்து மற்றும் டிராம் பரிமாற்றத்திற்கு இடையே 14 மைல் பாதை 25-30 நிமிடங்கள் எடுக்கும்.

பேருந்தின் வெளிப்புறத்தில் 10 சென்சார்கள் இணைக்கப்பட்டுள்ளன. வை பேருந்து எப்போது திரும்ப வேண்டும் அல்லது சாலையில் ஏதாவது தடையாக இருந்தால் உடனடியாகக் கண்டறியும்.

கூடுதல் பாதுகாப்புக்காக, ஏதேனும் தவறு நடந்தால் தலையிட அனைத்து பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கையில் ஒரு ஓட்டுநர் இருப்பார். ஆனால் பெரும்பாலும் அவர்களின் கைகள் ஸ்டீயரிங் வீலில் இருந்து விலகி இருக்கும்.

இப்பேருந்தில் எல்லோருக்கும் டிக்கெட் கிடைத்ததா என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பில் ஒரு பேருந்து கப்டன் இருப்பார்.

பேருந்து மணிக்கு 50 மணி வேகத்தில் பயணிக்கக்கூடியது. பொதுமக்கள் பேருந்தில் பயணிப்பது பாதுகாப்பானதா என்பதை அறிய பல சோதனைகள் செய்யப்பட்டு வெற்றி கண்டுள்ளது. ஓட்டுநர் இல்லாத பேருந்தில் பயணிக்கும் போது அது சாதாரமான பேருந்தில் பணிக்கும் உணவர்வை உணர்த்துகிறது என ஸ்டேஜ்கோச் தெரிவித்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert