März 28, 2025

தனித்தவில் வாசிக்க முற்பட்டு , நினைவேந்தல்களையே குழப்பாதீர்கள்


தனித்தவில் வாசித்து , நினைவேந்தல் நிகழ்வுகளில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் , அவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்துபவர்களுக்கு மக்கள் பாடம் படிப்பிக்கும் காலம் விரைவில் வரும் எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நினைவேந்தல்களை கைப்பற்றவேண்டும் என ஒரு தரப்பு கூறும் நிலையில், தற்போது வடக்கு, கிழக்கில் உள்ள பாராளுமன்றத்தில் இருக்கும் 22 ஆசனங்களையும் எந்தவொரு தமிழ்க்கட்சிகளுமே முழுமையாகக் கைப்பற்றாத நிலையே காணப்படுகின்றது.

அந்த வகையில் பாாளுமன்றத்தை முழுமையாகக் கைப்பற்றிவிட்டு, நினைவேந்தல்களை கைப்பற்றுவது பற்றி சிந்திக்கலாம்.

தமிழர் தாயகத்தில் போராளிகள் உட்பட பாதிக்கப்பட்ட தரப்புகள் அமைதியாகக் காணப்படும் நிலையில், எங்கோ இருந்த தரப்புக்கள் தற்போது துள்ளிக் குதித்துக்கொண்டிருக்கின்றனர்.

திலீபனின் நினைவேந்தல் , அன்னை பூபதியின் நினைவேந்தல் போன்றவற்றில் குழப்பங்கள் இடம்பெற்றிருந்தது.எனவே தமிழ்த் தலைவர்கள் தனி வாத்தியம் இசைக்க முற்பட கூடாது. ஒருமித்து நினைவேந்தல்களை மேற்கொள்ளும் தருணத்திலே எங்களுக்கான நீதி கிடைக்கப்பெறும் என்றனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert