மிக்-21 போர் வானூர்தி வீட்டில் மோதியதில் மூவர் பலி!
இந்தியாவின் மேற்கு மாநிலமான ராஜஸ்தானில் இன்று திங்கட்கிழமை மிக்-21 போர் வானூர்தி ஒன்று வீடு ஒன்றில் மோதியதில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
மிக் வானூர்தி வனூர்தி தளத்திலிருந்து வழமையான பயிற்சிக்காகப் புறப்பட்டது. வானூர்தியை செலுத்திய வானோடி அவசர நிலையை அறிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்படி விமானத்தை மீட்க முயன்றார்.
அவ்வாறு செய்யத் தவறியதால், அவர் வானூர்தியிலிருந்து வெளியேற்றத்தைத் தொடங்கினார். அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக வான்படை தெரிவித்துள்ளது.
ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள பஹ்லோல் நகரில் உள்ள ஒரு வீட்டின் மீது வானூர்தி விழுந்தது. இந்த விபத்தில் மூன்று பொதுமக்கள் உயிரிழந்தனர்.
விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக வான்படை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இராணுவம் பல சமீபத்திய விமான விபத்துக்களையும் சந்தித்துள்ளது.
1963 இல் சோவியத் யூனியனிடமிருந்து முதன்முதலில் மிக் வானூர்திகளை இந்திய வாங்கியிருந்தது. பின்னர் கடற்படையில் இணைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இந்தியா காலாவதியான தொழில்நுட்பத்தை தொடர்ந்து நம்பியிருப்பது அதன் விமானிகளுக்கு ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது என மேற்கு ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
கடந்த ஜூலை மாதம், ராஜஸ்தானில் உள்ள பார்மர் அருகே இரட்டை இருக்கைகள் கொண்ட எம்ஐஜி-21 பயிற்சி வானூர்தி விபத்துக்குள்ளானதில் இரண்டு வானோடிகள் உயிரிழந்தனர்.
2021 ஜனவரிக்குப் பிறகு நடந்த ஆறாவது MiG-21 விபத்தில் ஐந்து வானோடிகளும் கொல்லப்பட்டனர்.
கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் பகுதியில் 3 பேருடன் சென்ற இந்திய இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானது.
2023 ஜனவரியில் இந்திய தலைநகர் புது டெல்லிக்கு தெற்கே வழக்கமான பயிற்சியின் போது இரண்டு இந்திய போர் வானனூர்திகள் நடுவானில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.
ஜனவரி 2020 இல், இந்தியாவின் மிக மூத்த இராணுவ அதிகாரி, அப்போதைய பாதுகாப்புப் படைகளின் தலைவர் பிபின் ராவத், ரஷ்ய தயாரிப்பான இராணுவப் போக்குவரத்து ஹெலிகாப்டர் விமானத் தளத்திற்குச் செல்லும் வழியில் விபத்துக்குள்ளானதில் கொல்லப்பட்ட 13 பேரில் ஒருவர்.
ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை நம்பியிருந்தும் இந்தியா , தனது வான்பைடையை நவீனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மேலும் சொந்தமாக உள்நாட்டு வானூர்தி தயாரிப்பை உருவாக்க முயற்சிக்கிறது.