கோதுமை மா, சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பு!
கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ கோதுமை மாவுக்கான 3 ரூபாய் என்ற சுங்க வரிச் சலுகை நீக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு நேற்றைய தினம் அறிவித்திருந்தது.
இருப்பினும் வரித் திருத்தத்தினால் கோதுமை மாவின் விலையில் மாற்றம் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்திருந்த போதும் இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோகிராம் சீனியின் விலையும் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.