November 23, 2024

இரண்டு வருடமாக புலனாய்வாளரை காணோம்?


முல்லைத்தீவு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் மீதான வழக்கில் வழக்கு தொடுனரான கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணையை முல்லைதீவு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் மீது முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் முல்லைத்தீவு காவல்துறையினரால் 2019 ஏப்ரலில் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இன்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கு தொடுனரான முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம் கடற்படை புலனாய்வு அதிகாரி வருகைதருகை தராதுள்ளமை தொடர்பில் சுட்டிக்காட்டப்படிருந்தது.

இந்நிலையில் வழக்கு தொடுனரான கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணைகள் எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி வரையான தவணையிடப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏப்ரல் 2019 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்த போது பொதுமக்கள் மற்றும் ஊடகவியலளார்களை முறையற்ற விதத்தில் புகைப்படம் பிடிக்க முற்பட்ட புலனாய்வு அதிகாரியே மிரட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert