இனப்படுகொலையாளி ரணில் பிரித்தானியா பயணம் .
3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் சிங்கள பேரினவாத அரசின் ஜனாதிபதி இனப்படுகொலையாளி ரணில் விக்ரமசிங்க புதன்கிழமை பிரித்தானியா செல்கிறார்.
சுமார் 70 ஆண்டுக்காலம் ஐக்கிய இராச்சியத்தின் அரியணையை அலங்கரித்த 2ஆம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு செப்டெம்பர் 8ஆம் திகதி காலமானார். அவரது மறைவின் பின்னர் இளவரசர் 3ஆவது சார்ள்ஸ் முடிக்குரிய மன்னராக அறிவிக்கப்பட்டார்.
இதன் பிரகாரம், 3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை எதிர்வரும் சனிக்கிழமை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.