48 மணி நேரத்தில் சூடானிலிருந்து வெளியேறுங்கள் – அமெரிக்கா

Different nationalities fleeing from Sudan, sit inside a Spanish Air Force aircraft on its way to Madrid, on April 24, 2023.
சூடான் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு மோதல்கள் முடிவுக்கு வரவில்லை என்பதால் அங்கு வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரினே ஜீன் பெரைரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சூடானின் தற்போதை நிலை மிகவும் மோசமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், சூடானில் சண்டையிட்டு வரும் இராணுவத்தினருக்கும் துணை இராணவ படையினருக்கும் இடையில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.