November 23, 2024

இத்தாலியில் மிக சிறப்பாக நடைபெற்ற முத்தமிழ் விழா –

இயல்,இசை,நாடகம் ஆகிய மூன்றும் தமிழ்மொழியின் இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்துக் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது. இம்மூன்றுக்கும் தமிழர்கள் தந்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கும்  முத்தமிழ் விழாவினை இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கும் அனைத்து திலீபன் தமிழ்ச்சோலைகளும் ஒன்றிணைந்து பிரமாண்டமான கலைநிகழ்வாக  செனோவா மாநகரில் (23/04/2023)   ஞாயிற்றுக்கிழமை  காலை 10 மணிக்கு  பொதுச்சுடர் ஏற்றல், இத்தாலி கொடியேற்றல், 

தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது .எமது பாரம்பரியக் கலையான ஊரகக் கலை நடனத்துடன் பிரதம விருந்தினர் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரும் மண்டபத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து அகவணக்கம் ஈகைச்சுடர் ஏற்றல் மலர் வணக்கம் மங்கள விளக்கேற்றலுடன் ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் பாடசாலைக்கீதமும் பாடப்பட்டு மேடை நிகழ்வுகள் இனிதே ஆரம்பமானது. வரவேற்புரை வரவேற்பு நடனம் மலரும் மழலைகளின் முப்பரிமாணத் தோற்றத்தின் வெளிப்பாடு. அதனைத் தொடர்ந்து இத்தாலி தமிழ்கல்வி  சேவையின் 33 ஆண்டுகால பரிமாண வளர்ச்சிப் பயணத்தின் ஆவணப்பதிவு வெண்திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பன்னிரண்டாம் ஆண்டு கற்று முடித்த 31 மாணவர்களுக்கும் திலீபன் தமிழ்ச்சோலை 40 ஆசிரியர்களுக்குமான மதிப்பளிப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள் இணைய வழி மூலம் பண்ணிசை கற்று இசையால் நனைக்க, அடுத்து வரும் நிகழ்வுகளாக ரெச்சியோ  திலீபன் தமிழ்ச்சோலை மாணவிகளின் தாய்மொழி பற்றிய அபிநய நடனம் செனோவா திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் திருக்குறள் அரங்கேற்ற நாடகம் செனோவா திலீபன் கலைக்கூட மயில்குழாம் மாணவிகளின் மயில் நடனம், விவாத அரங்கம், வெரோனா திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் மெல்லிசை பாடலைத் தொடர்ந்து ரெச்சியோ  திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் வில்லிசை பாடல் பியல்லா திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் நாடகம் „புலவரின் தலையை காத்த தமிழ்“ ரெச்சியோ திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின்“ வசீகர தமிழ் „பாடலுக்கு நடனம் அனைத்தையும் கண்டு களித்த வண்ணம்,

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து ஒருங்கிணைப்பாளரும்,உயர்கல்விக்கான

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பணிப்பாளருமான

கலாநிதி பார்த்திபன் கந்தசாமி அவர்களின் சிறப்பு உரையினைத் தொடர்ந்து செனோவா திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் „வேங்கையின் மைந்தன்“ நாடகம், பியல்லா திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் எழுச்சி நடனத்துடன் நன்றியுரை, தேசியக்கொடி, இத்தாலிக்கொடி கையேற்றல், உறுதிமொழி தாரக மந்திரத்துடன் மாலை 6:00 மணிக்கு முத்தமிழுக்கு மகுடம் சூட்டி நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது .

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert