ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான நீடித்த போரால் உலக நாடுகளில் அதன் பாதிப்புகள் எதிரொலித்து வருகின்றன. இதனால், போரை முடிவுக்கு கொண்டு வர பொருளாதார தடை உள்ளிட்டவற்றை அமெரிக்கா போன்ற நாடுகள் மேற்கொண்டன. ஐரோப்பிய நாடுகள் தங்களது நாட்டில் இருந்து ரஷ்ய தூதர்களை வெளியேற்றின.
எனினும், போரானது முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், ஜெர்மனியில் இருந்து ரஷிய தூதர்களை வெளியேற்றி, ரஷ்யாவுக்கு அந்நாட்டு அரசு அதிர்ச்சி கொடுத்தது. ரஷ்யாவும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இதுபற்றி ரஷ்ய வெளியுறவு அமைச்சக பெண் செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா, அரசின் வெஜ்டா என்ற தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், 20-க்கும் மேற்பட்ட யேர்மனி நாட்டு தூதர்கள் வெளியேற உள்ளனர் என கூறியுள்ளார்.
இந்த நிலையில், உக்ரைன் போர் சூழலில், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளி அணி திரண்டன. அதில், யேர்மனியும் கைகோர்த்து கொண்டது. ரஷ்யாவுக்கு ஆதரவாக ஆயுதம் வழங்க கூடாது என பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டபோதும், அதில் யேர்மனியும் கலந்து கொண்டது. ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க கூடாது என சீனாவுக்கும் எச்சரிக்கை விடுத்தது. இது ரஷ்யாவின் கவனத்திற்கும் சென்றது. இந்த நிலையில், யேர்மனியில் இருந்து ரஷ்ய தூதர்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டனர். இதன் எதிரொலியாக, அதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில், ரஷ்யாவும் ஈடுபட்டு வருகிறது.