அனு உலைகளை நிரந்தரமாக மூடியது யேர்மனி
யேர்மனி இறுதி வரை பயன்படுத்திய 3 அணு உலைகளையும் நிரந்தரமாக மூடியுள்ளது.
செர்னோபில் மற்றும் புகுஷிமா பேரழிவிற்குப் பிறகு அணு உலைகளுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் அணுசக்தியின் அபாயங்கள் இறுதியில் சமாளிக்க முடியாதவை என்று அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஸ்டெஃபி லெம்கே தெரிவித்திருந்தார்.
தற்போது மூடப்பட்டுள்ள 3 அணு உலைகளும் யேர்மனிக்கு 6 விழுக்காடு மின்சாரத்தை வழங்கி வந்தன. கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் தனது நாட்டில் உள்ள 16 அணு உலைகளை ஜெர்மனி மூடியுள்ளது.
இந்த நிலையில்தான் கடைசி அணுமின் நிலையங்களான இஸார் 2 (Isar 2) நெக்கர்வெஸ்டெய்ம் 2 (Neckarwestheim 2) மற்றும் எம்ஸ்லாண்ட் (Emsland) ஆகியவை நேற்று சனிக்கிழமை முதல் மூடப்பட்டன.