எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!
எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை இன்றைய தினம் செவ்வாய்கிழமை காலை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.
எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் இந்த அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.
உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தொகுதிகள் நிர்ணயம் செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட தேசிய எல்லை நிர்ணயக் ஆணைக்குழு நவம்பர் 2022 இல் நியமிக்கப்பட்டது.
ஆர்.வி. திஸாநாயக்க, டபிள்யூ.எம்.எம்.ஆர். அதிகாரி, கே.தவலிங்கம் மற்றும் ஐ.ஏ. ஹமீட் உள்ளடங்கலாக தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் குறித்த அறிக்கை இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
புதிய எல்லை நிர்ணயத்தின் மூலம் எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்காயிரம் என்ற எல்லைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.