லண்டனில் தானியங்கி மகிழுந்தில் பயணம் செய்யும் பில் கேட்ஸ்
உலகப் பெருங் கோடீஸ்வரர்களுள் ஒருவரான பில் கேட்ஸ், லண்டனில் ஓட்டுநரில்லா தானியங்கி மகிழுந்தில் பயணம் செய்தார்.
வெய்வ் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுவரும் மாதிரி தானியங்கி மகிழுந்தில் பில் கேட்ஸும், வெய்வ் நிறுவன தலைமை அதிகாரியும் சேர்ந்து பயணித்தனர்.
வாகன போக்குவரத்தும், கூட்ட நெரிசலும் நிறைந்த லண்டன் மாநகர வீதிகள் வழியாக சென்ற தானியங்கி மகிழுந்தை, பெண் ஓட்டுநர் ஒருவர் அடிக்கடி ஸ்டீயரிங்கை சரிசெய்துகொண்டிருந்தார்.
பெரும்பாலும் தானியங்கி கார்கள், அவற்றின் memory-ல் feed செய்யப்பட்டுள்ள பாதைகள் வழியாக மட்டும் இயங்கிவந்த நிலையில், இந்த மகிழுந்து, ஒவ்வொரு சூழலிலும் அது இயக்கப்படும் விதத்தை வைத்து அதன் தன்னைத் தானே மேம்படுத்திக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்திரங்கள் மகிழுந்துகளை ஓட்டும் காலம் விரைவில் வரப்போவதாக பில் கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.