குருந்தூர்மலையில் வெள்ளையடிக்கும ரணில்!
முல்லைதீவு குருந்தூர்மலையில் நீதிமன்ற தடையினை தாண்டி இலங்கை படைகளால் விகாரை பணிகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது.எனினும் நீதிமன்ற கட்டளைகள் மீறப்பட்டமை தொடர்பில் இலங்கை காவல்துறை மௌனம் காத்துவருகின்றது.
இந்நிலையில் பௌத்தவிகாரை நிர்மாணப்பணிகள் சர்ச்சகளிற்கு வெள்ளையடிக்க முல்லைத்தீவு, குருந்தூர்மலை ஆலயத்தின் மேற்கு எல்லையில் தொல்பொருள் திணைக்களத்தினால சுவீகரிக்கப்பட்டிருந்த 229 ஏக்கர் காணியை விடுவிக்க நடவடிக்கைகளை ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளதாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விகாரையினை சூழ தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளால் உள்ளுர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு தண்ணிமுறுப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள காணியில் புத்தர் ஆலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்ட 229 ஏக்கர் காணியையும் உடனடியாக விடுவித்து உரியவர்களுக்கு வழங்குமாறு; ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
காணிகைள விடுவிப்பது தொடர்பிலான கடிதத்தை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தொல்பொருள் திணைக்கள உதவி ஆணையாளர் ஆகியோருக்கு ஜனாதிபதி செயலகம் அனுப்பி வைத்துள்ளது.