கச்சதீவில் புதிதாக தோன்றிய புத்தர்
கச்சதீவில் மர்மமான முறையில் சிறிலங்கா கடற்படையினரால் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்த மயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போத பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
கச்சதீவு இலங்கை – இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு செல்லும் ஒரு புனித பூமியாக காணப்படுகிறது.
இந்நிலையில், தற்போது, அங்கு இரகசியமாக புத்தர் சிலை வைத்து பெளத்த மயமாக்கல் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை இந்திய – இலங்கை உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடும் எனவும் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் சிறிலங்கா படையினர் கச்சதீவையும் விட்டுவைக்காது அங்கேயும் பாரிய புத்தர் சிலையொன்றை பிரதிஸ்டை செய்துள்ளார்கள்.