நாவற்குழியில் எதிர்ப்பையும் மீறி விகாரை திறந்த சவேந்திர சில்வா
யாழ்ப்பாணம் நாவற்குழியில் இராணுவத்தினரின் முழு ஒத்துழைப்புடன் சமீத்தி சுமன விகாரையின் கலச திரை நீக்கம் இன்றைய தினம் முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பங்குபற்றுதலுடன் பௌத்த ஆகம முறைப்படி சம்பிரதாய பூர்வமாக திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
இதன் பொழுது சிங்கள மக்கள் பௌத்த துறவிகள் இராணுவ அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்த நிலையில் விசேட பௌத்த நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இதேவேளை சவேந்திர சில்வாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நாவற்குழியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இனப்படுகொலையாளியே வெளியேறு, தமிழர் தேசத்தில் புத்தர் கோயில் எதற்கு? நிறுத்து நிறுத்து பௌத்த ஆக்கிரமிப்பை நிறுத்து, உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.