November 22, 2024

தொடர்ந்தும் டிரோன் பறக்கும்: பதிலடி தொடரும் ரஷ்யா

கிரீமியாவில் உள்ள கருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் டிரோன் ஒன்று பறந்ததால் கோபமடைந்த ரஷ்யா அதனை போர் விமானங்கள் மூலம் மோதி விபத்துக்குள்ளாக்கி வீழ்த்தியதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து சர்வதேச ஒப்பந்தத்தை ரஷ்யா மீறி உள்ளதாக அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனோவிடம் அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்தது. 

அத்துடன் சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடங்களில் டிரோன் தொடர்ந்து பறக்கும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. 

இந்த நிலையில், அமெரிக்காவின் அத்துமீறல்களுக்கு எதிர்காலத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்யா கூறியுள்ளது. 

இது குறித்து ரஷியாவின் பாதுகாப்புத்துறை மந்திரி செர்கெய் ஷாய்கு கூறுகையில், ரஷ்ய எல்லைக்கு அருகில் அமெரிக்காவின் டிரோன் பறந்ததைப் போல், எதிர்காலத்தில் அமெரிக்காவின் அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்றால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert