மத்திய வங்கிக்கு பாராட்டு!
கொள்கை வட்டிவீதங்களை அதிகரிக்கும் இலங்கையின் தீர்மானத்துக்கு, சர்வதேச நாணயநிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இது பணவீக்கத்தை குறைப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக,இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் பணவீக்கம் அளவுக்கதிகமான விதத்தில் பொதுமக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தனர்.
கொள்கை வட்டி வீதத்தை உயர்த்துவதற்கான மத்திய வங்கியின் முடிவு பொருத்தமானது மற்றும் பணவீக்க இலக்கு கட்டமைப்பின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நோக்கங்களுக்கு இணங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டனர்.
பணவீக்க இலக்குகளை அடைவதில் இலங்கை மத்திய வங்கியின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
பணவீக்கம் குறித்த கண்ணோட்டம் தொடர்பில் மத்திய வங்கிக்கும் சர்வதேச நாணய நிதிய ஊழியர்களுக்கும் இடையில் சில வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், கொள்கை வட்டி வீதத்தை 1 சதவீதம் உயர்த்துவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.