யாழில் கணணி தொழில்வாய்ப்பு மையம்!
புலம்பெயர் கனேடிய தமிழர் ஒருவரது முதலீட்டில் யாழில் முதலாவது கணணி பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்வாய்ப்பு மையம் உருவாகவுள்ளது
தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ கற்கைகளை யாழ்ப்பாணத்தில் வழங்குவதற்காக Northern Uni மற்றும் SLIIT ஆகிய நிறுவனங்கள் கைகோர்த்துள்ளது.
இதனுடைய ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது
ஆரம்ப நிகழ்வில் கல்வியியலாளர்கள், கல்வி துறை சார்ந்தவர்கள், முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப துறைசார் நிபுணர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Magick Group ஆனது கல்விக்கு வித்திடும் முகமாக யாழ்ப்பாணத்தில் NorthernUni இனை ஆரம்பிக்கிறது.
கணினி விஞ்ஞானம்/தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவம் போன்ற துறைகளில் தொழில்களை தொடர மாணவர்களின் அபிலாஷைகளை அதிகரித்துள்ளது. இருப்பினும் அரச பல்கலைக்கழகங்கள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான உள்வாங்கல்களை கொண்டிருப்பதால், உயர் தகுதி வாய்ந்த அதிகளவான மாணவர்களுக்கு நியாயமான கட்டணத்துடன் உயர்கல்வி வாய்ப்புக்களை அணுக முடியாதுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெறுமனே 200 மாணவர்கள் மாத்திரமே அரச பல்கலைக்கழகங்களில் கணினி விஞ்ஞானம்/தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கற்கைகளில் சிறப்புப்பட்டங்களை பயிலமுடியும்.
இந்நிலையில் அனைத்து மாணவர்களையும் Northern Uni அங்கிகரித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரம் மற்றும் நேரடி அனுமதி பெற்ற SLIIT இனுடைய 4 வருட பட்டப்படிப்புக்களை யாழ்ப்பாணத்தில் வழங்குகிறது.
யாழ்ப்பாண நகரின் மையப்பகுதியில் இதன் வளாகமானது அமைந்துள்ளது. Northern Uni ஆனது தகவல் தொழில்நுட்ப கற்கையின் 7 சிறப்புப்பட்டங்களையும் வணிக முகாமைத்துவத்தின் 4 சிறப்புப்பட்டங்களையும் வழங்குகிறது. மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டங்களும் காணப்படுகிறது.
NorthernUni அதன் வலுவான தொழில் ரீதியான தொடர்புகள் மற்றும் அதன் சொந்த நிறுவனமான MagickTech ஊடாக மாணவர்களுக்கு தொழில்துறை தொடர்புகள், தொழில் பயிற்சி மற்றும் தொழில்வாய்ப்புக்களை வழங்குகிறது.
Magick Group ஆனது SLIIT நிறுவனத்துடன் இணைந்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதன் மூலம் வடக்கு பிராந்தியத்தின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதனையும் தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் தயாரிப்பு மேம்பாட்டிற்கான இடமாக பிராந்தியத்தை மேம்படுத்துவதனையும் நோக்கமாக கொண்டுள்ளது.
Magick Group ஆனது 30வருட கால அனுபவத்தை கொண்டு வீட்டின் உட்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்ப உற்பத்திகள்/சேவைகள் மற்றும் கல்வி என்பவற்றில் சேவையாற்றி வருகிறது. இக்குழுவானது MagickWoods, MagickTech, MagickHome மற்றும் NorthernUni போன்ற அடையாளத்துடன் உலகளாவிய இருப்பை கொண்டுள்ளது.
SLIIT ஆனது தகைமையானதும் கௌரவமானதுமானதொரு வரலாற்றை கொண்டுள்ளதோடு தெற்காசியாவின் முன்னணி 200 பல்கலைக்கழகங்கள் வரிசையில் இடம்பிடித்துள்ளது என்பதோடு இலங்கையின் QS இனுடைய உலகத்தரப்படுத்தல் வரிசையில் 7வதாகவும் விளங்குகிறது.