மகிந்தவுக்கு மீண்டும் பிரதமர் கதிரை!
பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் இருந்து பிரதமர் பதவியை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஸவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டம் அமுலுக்கு வரவுள்ளது.
முன்னதாக அதற்கு ஆளுங்கட்சி நண்பர்கள் ஆதரவு கோரியதாக சுதந்திர மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்திருந்தார்.
பிரதமர் பதவியை மாற்றும் திட்டம் உள்ளது. பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியில் உள்ள நண்பர்கள் எங்களிடம் அத்தகைய யோசனையை முன்வைத்தனர். தினேஸ் குணவர்தனவை நீக்கிவிட்டு மீண்டும் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்கும் திட்டம் இருப்பதாக பேசப்பட்டுவந்த நிலையில் மகிந்தவின் நியமனம் உறுதியாகியுள்ளது.
இதனிடையே தலைவலிக்கு தலையணையை மாற்றினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அரசாங்கம் வீட்டுக்குப் போக வேண்டும். பிரதமர் பதவியை மாற்றுவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளுக்கு விடை காண முடியாது என தெற்கில் கோசங்கள் எழுந்துள்ளன.