மைத்திரியை யானையும் துரத்துகின்றது!
மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் சட்டவிரோதமான முறையில் மூன்று யானைகளை இடமாற்றம் செய்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாக நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கந்துல, மஞ்சுளா மற்றும் காஞ்சனா ஆகிய மூன்று யானைகளும் சட்டவிரோதமான முறையில் ஒப்படைக்கப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
சட்டவிரோதமான முறையில் யானைகளை தனது காவலில் வைத்திருந்த சம்பவத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை பெற்ற நபரிடம் விலங்குகளை ஒப்படைத்தமை தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
அதன்படி உரிய விசாரணைகள் நடத்தப்படும் என பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மியான்மரில் இருந்து 33 இலட்சம் ரூபாவிற்கு யானைக்குட்டியை இறக்குமதி செய்ததில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இச்சம்பவம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த மூன்று யானைகளும் வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கே வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.