November 24, 2024

யாழில் தாக்குப்பிடிக்குமா மோடியின் மாடி!

தற்போதைக்கு யாழ்ப்பாணத்தின் உயரமான கட்டடத்தை இந்தியா அமைத்துக்கொடுத்திருக்கிறது. ஆனால் கோரையான சுண்ணக்கல்லினாலான யாழ்ப்பாணத்தின் நிலக்கீழ் அமைப்பானது 11 மாடிகள் கொண்ட உயர் கட்டடம் ஒன்றைத் தாங்கி நிற்குமா? முழுக்கமுழுக்க சிமெந்தினால் அமைக்கப்பட்டுள்ள இதுபோன்ற கட்டடங்களை அமைக்கும்போது யாழ்.நிலத்தின் எதிர்காலம், புவியியல், சுற்றுச்சூழல் விடயங்களில் கவனம் செலுத்தப்படுகின்றதா என கேள்வி எழுந்துள்ளது.

அதாவது கொழும்புக்கு சீனா அமைத்துக்கொடுத்த தாமரைக் கோபுரம் போல யாழ்ப்பாணத்திற்கு இந்தக் கலாசார நிலையத்தை அமைத்திருக்கிறது இந்தியா. அண்மைக்காலமாக நிலநடுக்க சமிக்ஞைகள் தென்படும் இலங்கையில் இவ்வாறு உயரமான கட்டடங்களை அமைக்க எந்தவகையில் அனுமதிகள் வழங்கப்படுகின்றன? எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் குருநகரில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பு மனை தவிர ஜந்து மாடிகளை கொண்ட கட்டடங்கள் முன்னதாக அமைக்கப்பட்டிருக்கவில்லை.

யாழ்.பல்கலைக்கழகத்திலும் தமிழீழ தேச நிர்மாணிகளால் அத்தகைய கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டு தற்போதும் தொடர்கின்றது.

எனினும் 2009 பின்னராக யாழ்.நகரில் அரசியல் பின்னணியில் ஹோட்டல்கள் சில நிலத்தரையினை கவனத்தில் கொள்ளாது கட்டப்பட்டது.

இந்நிலையில் தற்போது முதன்முறையாக   11 மாடிகள் கொண்ட உயர் கட்டடம் ஒன்றை இந்தியா கட்டிவழங்கியுள்ளது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert