தேர்தலில் இம்முறை 80,672 பேர் போட்டி!
உள்ளூராட்சித் தேர்தலில் இம்முறை 80,672 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாகவும், சுயேட்சை குழுக்களாகவும் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக கம்பஹா மாவட்டத்தில் 7,530 பேர் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். குறைந்த எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். முல்லைத்தீவு மாட்டவத்தில் 592 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 726 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,268 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 3,788 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 3,162 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 2,752 பேரும், நுவெரெலியா மாவட்டத்தில் 2,489 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 4,122 பேரும், மன்னார் மாவட்டத்தில் 827 பேரும், வவுனியா மாவட்டத்தில் 1,597 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 7,177 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,297 பேரும் என மொத்தமாக 80,672 பேர் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்ற