வெட்கங்கெட்டரணில்?
யாழ்ப்பாணம் வருகை தந்த ரணிலின் பயன்பாட்டிற்கான அதிசொகுசு வாகனங்கள் கனரக தாங்கி வாகனங்கள் மூலம் யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்டமை அம்பலமாகியுள்ளது.பலாலிக்கு பல மில்லினய் செலவில் எடுத்துவரப்பட்ட வாகனங்கள் பற்றி தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதனிடையே இலங்கை மருத்துவமனைகள் மருந்து பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன மருத்துகள் வாங்க அவசியமான 10 பில்லியன் ரூபாவை கூட திரட்ட முடியாமல் தடுமாறுகின்றார்கள்
அரச ஊழியர்களுக்கு உரிய திகதியில் சம்பளம் வழங்க நிதி திரட்ட முடியாமல் திறைசேரி திணறி வருகிறது.
அனல் மின் நிலயத்திகுரிய இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிக்கு பணம் செலுத்த பணம் இல்லை.
தேசிய பரீட்சை காலங்களிலும் ஓர் ஆண்டுக்கு மேலாக மின்வெட்டு தொடருகின்றது
பெருந்தெருக்களை பராமரிக்க கூட வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் பணம் இல்லை
உள்ளுராட்சி சபை தேர்தளுக்கான 70 கோடி ரூபா பணத்தை விடுவிக்க திறைசேரியிடம் பணம் இல்லை.
வெளிநாட்டுக் கடன்களை மீள செலுத்த தேவையான 7 பில்லியன் அமெரிக்கா டொலர்கள் தற்சமயம் வரை திறைசேரியுடம் இல்லை.
பாதீட்டில் மதிப்பிட்டு மீளும் செலவுகள் (Recurrent expenditures) அமைச்சுக்கள் ரீதியாக 6 % குறைக்கப்பட்டு இருக்கின்றன.
சமநேரத்தில் செலவுகளை எடு செய்ய 2022 டிசம்பரில் மட்டும் மத்திய வங்கி 133.3 பில்லியன் ரூபா பணத்தை அச்சிட்டு இருக்கின்றது.
ஆனால் ரணில் விக்ரமசிங்கே என்கிற மனிதர் 200 மில்லியன் ரூபா ($548,000) செலவில் கொழும்பில் சுதந்திர தினம் கொண்டாடுகின்றார் .
இது போதாதென்று யாழ்ப்பாணத்தில் இரண்டாவது சுதந்திர தினத்தை ஏற்பாடு செய்து இருக்கின்றார்
உண்மையில் இந்த மனிதருக்கு வெட்கம் இல்லை