தெற்கிலும் தமிழீழம்?
மாகாண சபைகளுக்கு தொல்லியல் தளங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பதற்கான உரிமையுடன் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவதன் மூலம் பிரிவினைக்கு வழிவகுக்குமென்றால் ஜனாதிபதி காணி அதிகாரங்களை வழங்கினால் தெற்கிலுள்ள மாகாண சபைகளையும் பிரிந்து செல்லுமாறு மகாநாயக்க தேரர்கள் கூறுகின்றார்களா என கேள்வி எழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன்.
13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த கூடாதென பௌத்த பீடங்கள் இலங்கை ஜனாதிபதிக்கு அண்மையில் கடிதம் அனுப்பியுள்ளன்.இந்நிலையில் மாகாண சபைகளுக்கு தொல்பொருள் இடங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பதற்கான உரிமையுடன் காவல்துறை அதிகாரம் உள்ளதா? அப்படியானால், ஏன் இல்லை? ஏனவும் கேள்வி எழுப்பியுள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன்.
சுவிட்சர்லாந்தில் 20 மாகாணங்கள்; உள்ளன. மத்திய அரசின் சில உரிமைகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு மாகாணமும் சுதந்திரமாகவும் தனித்தனியாகவும் செயல்பட அனுமதிக்கும் சுவிட்சர்லாந்தைப் போன்று ஒரு கூட்டமைப்பை நாம் உருவாக்க முடியும். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்கள் சுதந்திரமாகச் செயற்பட விரும்பாது, வடக்கும் கிழக்கும் மாத்திரமே விரும்புமென தேரர்கள் நினைக்கிறார்கள். வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் பேசும் பகுதிகள் என்பதால் பிரிந்து செல்ல அல்லது சுதந்திரமாக செயல்பட விரும்புவார்கள் என்று அவர்கள் ஊகிக்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சிங்களவர்களால் ஆளப்படும் மத்திய அரசாங்கத்தின் கீழ் தமிழர்கள் திருப்தியடையவில்லை. எனவே வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு ஆட்சி செய்ய எந்த சுதந்திரமும் வழங்கப்படாமல் வடக்கு மற்றும் கிழக்கை பலவந்தமாக சிங்களவர்களின் அடியில் வைத்திருக்க வேண்டும் என்று தேரர்கள் நம்புகிறார்களா எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆனால் வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப அத்தகைய சிந்தனைகள் கைகொடுக்காது.ஆட்சியாளர்கள் தமது அரசியலை முன்னெடுக்க இனவாதம் தேவையென்றாலும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள கைகொடுக்காடுக்காதெனவும் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.