முல்லைத்தீவில் தமிழினத்தின் கரிநாள் எதிர்ப்பு போராட்டம்!
திர தின நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்ற நிலைமையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருவதோடு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு கறுப்பு கொடிகள் தொங்க விடப்பட்டு கறுப்பு தினமாக முன்னெடுத்து வருகின்றது.
சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக கடைப்பிடிக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இன்று காலை 11 மணியளவில் முல்லைத்தீவு சந்தைக்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நிறைவடைந்தது.
குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சடடத்தரணி காண்டீபன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.