வேலி பாய்ந்தவர்களிற்கு நடவடிக்கை:மாவை!
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசு கட்சியிலிருந்து வேறு கட்சிகளுக்கு தாவி தேர்தலில் போட்டியிடும் இளம் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதி ராஜா தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் அண்மையில் சாவகச்சேரியில் இடம் பெற்ற வேட்பாளர் அறிமுக மேடையில் தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களும் தமது கட்சியின் மேடையில் வந்து ஏறுவதற்கு தயாராகிறார்கள் என கூறியிருக்கின்றார்,
அவரது கருத்து தொடர்பில் விளக்கமளித்துள்ள மாவை சேனாதிராசா அது அவர்களுடைய கருத்தாக இருக்கலாம் அவர்கள் அனைவரையும் இணைத்து எதிர்காலத்தில் செயல்படுகின்றபோது அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்கும்.
தேர்தல் தொடர்பில் தமிழரசு கட்சி எடுத்த தீர்மானத்தின் பின்னர் இளம் உறுப்பினர்கள் சிலர் எமக்கு தெரிந்த வகையில் வேறு கட்சிகளிலே சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பதை அறிகின்றோம்.அப்படியானவர்கள் பற்றி தமிழரசு கட்சியில் மத்தியசெயற்குழுவில் பரிசீலிக்கவுள்ளோம். கட்சி மாறியவர்களுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? என்பது தொடர்பிலும் ஆராயவுள்ளோம் என மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி உட்பட பல உள்ளுராட்சி சபைகளில் தமிழரசுக்கட்சிக்கெதிராக அதன் செயற்பாட்டாளர்கள் பலரும் சுயேட்சைக்குழுக்களாகவும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.