சத்தியமா எங்களிடையே சண்டையே இல்லை!
பரஸ்பரம் ஒரே மேடையில் அமர்ந்து பேச மறுத்துவரும் தமிழ் அரசியல் தலைவர்கள் அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட்டை ஒன்றாக சந்தித்துள்ளனர். சந்திப்பில் விக்டோரியா நூலண்ட், எம்.ஏ சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட பல கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வுக்கான நம்பிக்கைகள் குறித்து சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாக விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார்.
“வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டவர்கள் தீர்வுகளை நோக்கி ஒன்றிணைந்து செயல்படும்போது, ஜனநாயகம் வலுப்பெறும்.“ என்றும் கூறியுள்ளார்.
சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரவூவ் ஹக்கீம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரிசாட் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதனிடையே இன்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் விக்டோரியா நூலண்ட், சந்தித்துள்ளார்.
ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை சந்திக்க சிங்கள சிவில் செயற்பாட்டாளர்கள் தயவை தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்கள் நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.