கறுப்புநாள்:பெருகும் ஆதரவு!
இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு தினமான அனுஸ்ரிப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் ஒன்றியங்கள் அறிவித்துள்ளன.
இதனிடையே இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை கறுப்பு தினமான அனுஸ்ரிப்பதாக அறிவித்து அனைத்து மட்டங்களிலும் மக்களது ஆதரவை திரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மும்முரமாகியுள்ளனர்.
ஆதரவு கோரி மத தலைவர்களையும் அவர்கள் சந்தித்துவருகின்றனர்.
இதனிடையே மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் ஒன்றிய தலைவி மனுவல் உதயச்சந்திரா மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கறுப்பு தினமான அனுஸ்ரிப்பதற்கான பகிரங்க ஆதரவை தெரிவித்துள்ளார்.