பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று மதியம் 1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கிய நிலையில், அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர்.
இந்த நிலநடுக்கத்தில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பதற்றம் நிலவியது.
இந்த நிலையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1-ஆக பதிவாகி உள்ளது.
நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிலோமீட்டர், அதன் மையம் இஸ்லாமாபாத்தில் இருந்து மேற்கே 37 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.