கோத்தாவிற்கு குழுவிற்கு எதிரான ரணிலின் முறைப்பாடு!
ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிபதி உபாலி அபேரத்ன தலைமையிலான அரசியல் பழிவாங்கல்களை விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைத்துள்ள பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்துமாறு சட்டமா அதிபர் இன்று (25) மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இரத்து செய்யுமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு நிஷங்க பந்துல கருணாரத்ன, டி. எம். சமரகோன் மற்றும் லஃபர் தாஹிர் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மிலிந்த குணதிலக்க, மனுதாரருக்கு எதிராக உரிய ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை செயலாளரிடம் இரண்டு வார கால அவகாசம் கோரினார்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த கோரிக்கையை அனுமதித்ததுடன், பெப்ரவரி 8 ஆம் திகதி மனுவை மீண்டும் கூட்டுமாறும் குழுவிற்கு உத்தரவிட்டது.
அன்றைய தினம் மனுதாரருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சிபாரிசுகள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் பிரதி சொலிசிட்டர் ஜெனரலுக்கு நீதிபதிகள் குழாம் அறிவித்தது.
அரசியல் பழிவாங்கல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு தமக்கு எதிராக எந்தவொரு நியாயமான விசாரணையையும் நடத்தாமல் பரிந்துரைகளை வழங்கியமை சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றில் கோரியுள்ளார்.
இதன்படி, தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை செல்லுபடியற்ற வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.