ஐ.நா.வுக்கென்று கூறி ஆள்கடத்தும் புலம்பெயர் அலப்பறைகள்!!
என்ன வேலை செய்யுறீங்க..‘ எண்டு கேட்டால் ‚..டொக்டராக இருக்கிறன்..‘, ‚..பாங்கில வேலை செய்யிறன்..‘, ‚..டக்சி டிரைவரா இருக்கிறன்..‘ எண்டு சொல்றது மாதிரி, ‚..ஐ.நா. வேலைத்திட்டத்தில இருக்கிறன்..‘ என்று சொல்லுறதும், புலம்பெயர் நாடுகளில ஒரு சிலருக்கு முழுநேர வேலைதான்.
அதாவது வேற வேலை எதுவும் செய்யாமல் ஒரு வருசத்தில ரெண்டு தடவை மாத்திரம் நடக்கிற ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு போய் வாரதையே ஒரு முழுநேர வேலையாச் செய்துகொண்டிருக்கிற சில புலம்பெயர் அலப்பறைகள் இங்க இருக்கினம்.
‚ஓ.. அப்படியெண்டா ஐ.நா சபையின் பணியாளர்களா அவர்கள்..??‘ என்று வாயைப் பிளந்திடாதேயுங்கோ.
இப்படி ஒன்றுமே இல்லாத அலப்பறைகளையெல்லாம் வைத்து சம்பளம் கொடுக்க ஐ.நாவுக்கு என்ன விசரா?
அப்படியெண்டா இவங்களுக்கு சம்பளம்?
அதுக்குத்தான் சில புலம்பெயர் ஆர்வக்கோளாறுகள் இருக்குதுகளே..!!
கீழ கிடக்கிற ஒரு பேப்பரில ‚தமிழ் தேசியம்‘ எண்டு எழுதிப்போட்டு இவர்களிடம் யார் குடுத்தாலும் யார் எவர் என்று பார்க்காமல் உடனே காசை அள்ளிக்கொடுக்கக்கூடிய சிலர்தான் இந்த அலப்பறைகளின் டார்கெட்.
ஜெனிவாவில் இருக்கிற சுப்பர் மார்கெட்டுக்கு வரும் யாராவது வெள்ளைக்காரை நட்பாக்கி அவருடன் நிண்டு போட்டோ எடுத்துத்துவிட்டு, ‚நான் லத்தின் அமெரிக்க நாடொன்றின் தூதுவரைச் சந்தித்தேன்‘, ‚இஸ்ரேலின் உயரதிகாரி எங்களுக்கு உதவத் தயார் எண்டு சொன்னவர்‘, ‚பிடல் காஸ்ரோவிண்ட மச்சானோட ரகசியச் சந்திப்பு செய்தனாங்க..‘ இப்படி பம்மாத்துக் காட்டுவதுதான் இவர்களது ஜெனிவா வேலைத்திட்டம்.
கடந்த 10 வருடங்களா ஜெனிவாவில் இப்படிப் புதினம் காட்டிக்கொண்டிருந்த ஒன்று இரண்டு இளசுகள் கடந்த சில கூட்டத்தொடரில காணக்கிடைக்கேல்ல.
ஒருவேளை மனம் திருந்தி வேலைக்கு கீலைக்கு போகத்தொடங்கிட்டினமாக்கும் என்று விசாரிச்சுப் பார்த்தபோதுதான் கோதாரிபிடிச்சவன்களிண்ட ஒரு சுத்துமாத்து தெரியவந்தது.
ஜெனிவாவுக்கு என்று தங்கட நிறுவனத்திண்ட பேரில பலரை இலங்கையில இருந்து சுவிசுக்கு எடுப்பித்து, சுவிசில ‚அசைலம்‘ அடிக்கவச்சிட்டான்களாம்.
சும்மா இல்ல, ஒவ்வொருவரிட்டேயும் 30 ஆயிரம் சுவிஸ் பிராங் வாங்கிக்கொண்டாம்.
இந்த விசயம் சுவிஸ் குடிவரவுத் திணைக்களத்திற்கு தெரியவந்ததைத்தொடர்ந்து, ஐ.நாவுக்கு என்று வருபவர்களுக்கு மாத்திரமல்ல அவர்களை ஐ.நாவுக்கு எடுப்பித்த அந்த அலப்பறைகளுக்கும் தடைவிதித்துவிட்டதாம் ஜெனீவா.
இப்ப ஜெனிவாவை அப்படியே கைவிட்டுவிட்டு பிரசில்ஸ்சின் பக்கம் சுத்திக்கொண்டுநிக்கினமாம்.
அட நல்ல பிசினசா இருக்கே!! ஐ.நாவை வைத்து இப்படியெல்லாம் உழைக்கமுடியும் என்று தெரியாம பிரான்சில இருக்கிற கிருபா வாத்தி ‚மக்கள்…மக்கள்..‘ எண்டு 30 வருசமா அலைஞ்சுகொண்டு திரிகிறார்.
பிழைக்கத்தெரியாத மனுசன்!!???