தேர்தல் பின்போடப்படுமா?:முடிவில்லை-ரணில்!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடுவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என அதிபர் ரணில் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலை பிற்போடுமாறு சில தரப்பினர் வலியுறுத்தி வருகின்றநிலையில், இது தொடர்பில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்துள்ளார்.
நேற்று வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நிகழ்ந்த கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவினால் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமைய உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
எந்தவித வன்முறையும் இல்லாமல் மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தமது ஐக்கிய தேசிய கட்சி சில இடங்களில் தனித்தும், சில இடங்களில் கூட்டணியாகவும் போட்டியிடுவது தொடர்பில் பல விமர்ச்சனங்கள் வந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் தேர்தல் வெற்றி தொடர்பில் நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.