November 21, 2024

சாம்-சுமாவிடம் சத்தமின்றி தீர்வு வழங்கிய ரணில்!

தேர்தல் காலம் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சரது வருகையின் மத்தியில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை ரணில் சத்தமின்றி சாம் -சுமா கூட்டிடம் கையளித்துள்ளதாக செய்திகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கிய ஒரு வார கால காலக்கெடு 17 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் திடீரென இரா.சம்மந்தன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடக்கலநாதன், சுரேஸ பிரேமச்சந்திரன், விக்கினேஸ்வரன் ஆகியோருக்கு ஜனாதிபதி செயலகத்தால் அழைப்பு விடுக்கபட்ட நிலையில் எம்.ஏ.சுமந்திரன், மற்றும் இரா.சம்பந்தன் இருவருமே இந்த சந்திப்புக்கு சென்றிருந்தனர்.

அங்கு பின்வரும் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.

ழூஜனாதிபதி ரணில், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க இணக்கம் தெரிவித்தார்.

அதன் முதல்கட்டமாக மாகாண காவல்துறை ஆணையர்களின் எண்ணிக்கை 10ஆக குறைக்கப்பட்டு, அவர்கள் மாகாண நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படவுள்ளனர். 

வடக்கில் தொல்லியல், வனவளத்துறை, பாதுகாப்பு துறை என்பன கையகப்படுத்தியுள்ள காணிகள் விரைவாக விடுவிக்கப்படும் வகையில் திங்கட்கிழமை அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்படும். 

குருந்தூர்மலை, தென்னமரவாடி, திரியார் போன்ற தமிழர்களின் பாரமரிய காணிகளில் அத்துமீறி போடப்பட்ட எல்லைக் கற்கள் நீக்கப்படும் என பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert