September 19, 2024

ரணிலுக்கு பாடம் புகட்டுவோம் – முன்னாள் அமைச்சர்

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். எதிர்வரும் 22ஆவது திகதி எமது பலத்தை ஜனாதிபதிக்கு காண்பிப்போம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார். 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்து வந்த பாதையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மறந்துவிட்டார். பெரும்பான்மையான மக்கள் எம்முடன் உள்ளார்கள். 

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் கட்சி மட்டத்தில் வழங்கினோம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்பதால் தான் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்சவை வேட்பாளராக களமிறக்கினோம்.

ஜனாதிபதியின் அரசியல் செயற்பாடுகளுக்கு நாங்கள் எதிராக செயற்படுவதால் இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து எம்மை நீக்கினார். 

ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும்போது அனைத்து சாதக மற்றும் எதிரான கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert