Juni 26, 2024

வைத்திய கலாநிதி ஜெயகுலராஜா சாவடைந்தார்

முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரும் தமிழினப் பற்றாளரும் இயற்கை உயிரின சூழல் ஆர்வலருமான வைத்திய கலாநிதி ஜெயகுலராஜா அவர்கள் சாவடைந்துள்ளார். 

1983 இல் சிறிலங்கா சிங்கள கொடுஞ்சிறையில் சிறை வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி உயிருடன் மீண்டவர் வைத்திய கலாநிதி ஜெயகுலராஜா அவர்கள்.

அன்று முதல் எம் மண்ணை விட்டகலாது தாயகத்திலேயே வாழ்ந்து தாயகத்தின் பணிகளுக்காகவே தன்னை அர்ப்பணித்துப் பணிபுரிந்த ஓர் உன்னத மனிதத்தைத் தமிழினம் இழந்திருக்கிறது.

தங்கத்துரை குட்டிமணி சிறையிலிருந்த போது அவர்களின் கண்களை தோண்டி எடுத்து இந்த கண்களா தமிழீழம் காணப் போகிறது என்ற வரலாற்றை பதிவு செய்த வெலிக்கடை சிறையில் தேச விடுதலையின் தியாகிகளுக்கு மருத்துவம் செய்தார் என்பதற்காக வெஞ்சிறையில் அடைக்கப்பட்டு. மட்டக்களப்பு சிறை உடைத்த மானமா வீரத்தமிழனாய் வெளியேறி இன விடுதலைக்காய் இறுதிவரை பணிசெய்தவர் டாக்டர் ஜெயகுலராஜா

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert