April 30, 2024

விமானப்படையினரும் வீட்டிற்கு!

தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து விமானப்படையினரின் எண்ணிக்கையை 35,000 இலிருந்து 18,000 ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“இன்று ஒரு மொபைல் போன் ரூ.100,000 என்றால் 6 மாதத்தின் பின்னால் அதன் பெறுமதி 50,000 ரூவாவாக வீழ்ச்சியடைகின்றது. அதேபோன்றே இந்த தொழில்நுட்பமும் முன்னோக்கி செல்லும் போது செலவைக் குறைக்கும்.

நாம் அனைவரும் வாங்கக்கூடிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். சிசிடிவி என்பது புதிய விஷயம் அல்ல. AI தொழில்நுட்பமும் புதியதல்ல.

தற்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படையினரின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

உதாரணமாக, எங்கள் விமானப்படை தளங்களில் ஒன்று அநேகமாக பல கிலோமீட்டர்கள். 10 கிலோமீட்டர் என்றால், எத்தனை துருப்புக்களை நிறுத்த வேண்டும்? அதற்கு கெமராக்கள், தகவல் தொழில்நுட்பம், ட்ரோன் தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

கடந்த காலத்தில், ஒரு சிப்பாய் ஒரு குறிப்பிட்ட வரம்பை எதிர்நோக்குகிறார். ஆனால் ஒரே நேரத்தில் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை நாம் ட்ரோனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நாங்கள் மிகவும் எளிமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எங்கள் படைகளின் அளவைக் குறைக்கப் பார்க்கிறோம். மேலும் நாங்கள் தொழில்நுட்பத்தில் முன்னேறி வருகிறோம்.

அப்போது 35,000 ப​டையினரை வைத்து முன்னெடுத்த நடவடிக்கையினை தற்போது 18,000 பேரை வைத்து தொழில்நுட்பம் ஊடாக மேற்கொள்ள எதிர்பார்ப்பார்க்கிறோம் என்றார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert