Mai 7, 2024

யாழில் இடம்பெயர்ந்தவர்களே இல்லையாம்?

உயர்பாதுகாப்பு வலயக்காணிகளை 34வருடங்கள் கடந்தும் விடுவிக்க இலங்கை அரசு பின்னடித்துவரும் நிலையில் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து நலன்புரி நிலையங்களும் இவ்வருடத்தில் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் நடந்த யுத்தத்தின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களே அவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது யாழ். மாவட்டத்தில் 3 நலன்புரி நிலையங்கள் இயங்கி வருவதாகவும், அதில் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 10 ஆகுமெனவும் புதிய தகவலை அரசு அறிவித்துள்ளது.

அதேவேளை இடம்பெயர்ந்த 1,502 குடும்பங்கள் தற்போது நலன்புரி நிலையங்களில் இல்லாமல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

அதேவேளை, 212 குடும்பங்களுக்கு காணி விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் அவர்களுக்கு வீடுகளும் வழங்கப்படும்.

அது மாத்திரமன்றி,  காணி இல்லாத ஏனைய அனைவருக்கும் காணிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அவர்களுக்கான காணிகள் எதிர்காலத்தில் விடுவிக்கப்படவுள்ளதன் காரணமாக நலன்புரி நிலையங்கள் மூடப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உயர்பாதுகாப்பு வலயமென்ற பிரச்சாரத்தை முறியடிக்க தற்போது முகாம்களை காணி விடுவிப்பென்ற பேரில் மூடி விட முற்படுகின்றமை அம்பலமாகியுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert