Mai 17, 2024

புதிய அதிபர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக வடக்கு ஆளுநர் உள்ளிட்டவர்களிடம் மகஜர் கையளிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து வடக்கு ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை மகஜர் கையளிக்கப்பட்டது.

அத்துடன், கல்வி அமைச்சின் செயலாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஆகியோருக்கும் மகஜரின் பிரதி கையளிக்கப்பட்டது.

மகஜரில், 

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பரீட்சைப் புள்ளியின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு, 4 வருட தாமதத்தின் பின்னரான நிலைப்படுத்தலில் பரீட்சைப் புள்ளியின் அடிப்படையில் மாத்திரம்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதனை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம். காரணங்கள் பின்வருமாறு

ஒரே பரீட்சையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்கு இரு வேறு நியதிகளின்அடிப்படையில் நியமனம் வழங்கியமை (முதற்கட்ட நியமனத்தின் போது வெளிமாவட்ட சேவை கருத்தில் கொள்ளப்பட்டு அதே மாவட்டத்தில் நியமனம் வழங்கியமை), வெளிமாவட்ட சேவைைைய கருத்தில் கொள்ளாதது ( ஆகக் குறைந்தது 5,7,10,15வருடங்கள்),பொருத்தமான மருத்துவக் காரணங்களைக் கருத்திற் கொள்ளாமை,கணவன் மனைவிக்கிடையிலான நியமனம் இருவேறு மாவட்டம்,வயது மற்றும் சேவை மூப்பு கருத்திற் கொள்ளாமை, கணவன் அல்லது மனைவி மருத்துவத்துறையின் கருத்தை கருத்தில் கொள்ளாமை,தனித்து வாழும் குடும்பங்களின் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்திற் கொள்ளாமை, கணவன் அல்லது மனைவியின் வெளிமாவட்ட சேவை நிலையத்தைக் கருத்திற் கொள்ளாமை, கடமை நிறைவேற்று அதிபர்களின் பிரச்சினை தீர்க்கப்படாமல் அப் பாடசாலைகளுக்கு முரண்பாட்டைத் தோற்றுவிக்குமுகமாக நியமனம், 14 நாள் கால அவகாசம் தந்தும் கையொப்பமிட அனுமதிக்காமை, 192 புள்ளி பெற்றவருக்கு ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் பாடசாலையும் 188 புள்ளிகளைப் பெற்றவருக்கு கலட்டி அ.மி.த.க பாடசாலையும் வழங்கப்பட்டுள்ளமை திருமணமாகாத பெண் அதிபர்களின் நனிலமை கருத்திற் கொள்ளப்படாமை என்பன குறிப்பிடப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert