தமிழரசு தேர்தல்:பிரச்சாரம் மும்முரம்!

தமிழரசுக்கட்சி தலைவர் பதவிக்கான போட்டி கட்சியுள்ளே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இருவரும் தமக்கான ஆதரவை கோரி உள்ளக பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அங்கு கட்சியின் புதிய தலைவர் தெரிவு செய்யப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் மத்திய செயற்குழு கூடி புதிய தலைவரை முடிவு செய்யும் என்றும், புதிய தலைமைக்கு அதிக வேட்பு மனுக்கள் வந்தால் பொதுக்குழு கூடி புதிய தலைமையை முடிவு செய்யும் என்றும் சமீபத்தில் கூடிய மத்திய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை,  என்பதுடன் கட்சியால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவரே தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால் இம்முறை மாறாக இருதரப்பு போட்டிகாரணமாக உள்ளக வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert