Mai 10, 2024

தரைமட்டமாகினஅல் – ஜசீரா ஏபி செய்தி நிறுவன அலுவலகங்கள்!

A tower housing AP, Al Jazeera offices collapses after Israeli missile strikes in Gaza city, May 15, 2021. REUTERS/Mohammed Salem - RC2CGN9D5R8U

இஸ்ரேல் காசா மோதல்கள் மத்தியில் காஸாவில் இயங்கி வரும் பிரபல செய்தி நிறுவனமான அல் – ஜசீரா மற்றும் ஏபி (அஸோஸியேடட் பிரஸ்) செய்தி நிறுவனங்களின் அலுவலகங்களைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் அனைத்து கட்டடங்களும் தரைமட்டமாக்கபட்டன.அல் – ஜசீரா மற்றும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு காஸாவில் இயங்கி வரும் அஸோஸியேடட் பிரஸ் ஆகிய செய்தி நிறுவனங்களின் கட்டடங்களைக் குறி வைத்த இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியமை சர்வதேச ரீதியில் பலத்த கண்டனங்களை எழுப்பியுள்ளன.

குறித்த கட்டடங்களிலிருந்து அனைவரையும் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்திருந்தது. ஊடகவியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வெளியேறிய பின்னர் சுமார் அரை மணி நேரம் கழித்து இஸ்ரேல் இராணுவத்தினர் வான்வழித் தாக்குதல் மூலமாகச் செய்தி நிறுவனங்களின் அலுவலக கட்டடங்கள் மீது ஏவுகணைகள் ஏவி தரைமட்டமாக்கினர்.

சுமார் 11 கட்டடங்கள் இந்த வான்வழித் தாக்குதலில் தரைமட்டமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலால் காஸாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.செய்தி நிறுவனங்கள் மீதான இஸ்ரேலின் மிக மோசமான தாக்குதலுக்குக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.