Mai 17, 2024

வாயை மூடு,இது கோத்தா ஜனநாயகம்!

இலங்கையில் கோத்தா அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவோரை வேட்டையாடுவது தொடர்கின்றது.

அவ்வகையில் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தவிசாளர் அசேல சம்பத்தை இந்த மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சீனி மோசடி, புற்றுநோய் பதார்த்தம் அடங்கிய தேங்காய் எண்ணெய் மற்றும் நிவவாரண பொதி தொடர்பில், பகிரங்கமாக விமர்சனங்களை முன்வைத்த குற்றச்சாட்டில், கொம்பனிவீதி பொலிஸாரால் நேற்றைய தினம் அசேல சம்பத் கைதுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில், அவர் இன்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கோத்தா அரசின் உயர்மட்ட தொடர்புகளை பேணும் தரப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட பில்லியன் பெறுமதியான மோசடிகளை அம்பலப்படுத்தியவர்களை வேட்டையாடும் நடவடிக்கைகள் தொடர்கின்றது.