Mai 17, 2024

மேட் இன் சிறீலங்கா:விமலிற்கு தர்ம அடி!

புத்தாண்டு பரிசுகளை விநியோகிக்கச் சென்ற விமல் வீரவன்ச நீர்கொழும்பில்; மற்றொரு மக்களது எதிர்ப்பை பெற்றுள்ளார். நீர்கொழும்பு

மக்களே எதிராக கடுமையான போராட்டங்களை முன்னெடுத்ததாக தெரியவருகின்றது.புத்தாண்டு பரிசுகளை விநியோகிக்கச் சென்ற போதே நீர்கொழும்பு  மக்களிடமிருந்து எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன் அவர்களை வெளியேற்றிய சம்பவம் நடந்துள்ளது.

வீரவன்சவின் பரிசுகளை மக்கள் ஏற்க மறுத்து, லான்சாவை விரட்டியடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே அமைச்சர் விமல் வீரவன்ச கைத்தொழில் அமைச்சரான நாள் முதல், இலங்கை பிராண்டை உருவாக்குவதில் ஆர்வம் காட்டினார். பல உள்ளூர் தொழில்களை மீண்டும் கட்டமைத்து, இலங்கையில் தயாரிக்கப்பட்டது என்ற புதிய பிராண்டை உருவாக்கி வரும் அமைச்சர், இலங்கையில் தயாரிக்கப்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக வர்த்தக கண்காட்சியை ஏற்பாடு செய்தார்.

இப்போது அமைச்சரின் இந்த கருத்தை இலங்கைக்கு அப்பால் சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்வதில் தொழில்துறை அமைச்சகம் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, தூதரகங்கள் மூலம் மேட் இன் இலங்கை பிராண்ட் விளம்பரத்தை அறிமுகப்படுத்திய அவர், புத்தாண்டு தினத்தன்று சீனாவின் இலங்கை தூதரகத்தில் மேட் இன் இலங்கை பிராண்டைப் அறிமுகப்படுத்தியுள்ளார்.